2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கழிப்பறையில் கஷ்டமில்லாமல் போக...

George   / 2016 ஜூலை 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலச்சிக்கல், மூல வியாதி போன்றவற்றினால் இன்று பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  வெட்கம், அவமானம் காரணமாக அது தொடர்பில் பொதுத்தளத்தில் பேசுவதற்கும் அஞ்சுகின்றனர். எனினும், இன்றைய இலத்திரனியல் உலகில் இந்த நிலைமை சற்று தளர்வடைந்துள்ளது.

மனிதர்களின் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான விடயங்களை பொதுத்தளத்தில் வைத்து விவாதிக்கும் நிலைமை தற்போது தோன்றியுள்ளது. 

'புதியன புகுதலும் பழையன கழிதலும்' என்ற பழமொழிக்கு அமைவாக, மலம் கழிப்பதற்காக ஆரம்பக்காலங்களில்  கழிப்பறையில் இருந்த குழி மலசலகூடத்தை தற்போது காண்பது அரிது. ஏனெனில், இன்று பிரமாண்ட அலுவலகங்கள் தொடங்கி மத்தியத்தர குடும்பத்தினர்களது வீடுகள் வரை இருக்கை போல் அமைந்துள்ள மலசலகூடதையே பயன்படுத்தும் முறைமை வந்துவிட்டது. 

அலுவலகங்கள் தொடங்கி பெரும்பான்மையான வீடுகளில் இம்மலசலகூடம் இருப்பதால் இன்று அது பயன்பாட்டுமுறையாக மாறிவிட்டது. இந்த மலசலகூடத்துகே பலரும் பழக்கப்பட்டுவிட்டதால், குழி மலசலகூடத்தை பயன்படுத்த முடியாது பலர் இன்னலுறுகின்றனர்.

ஏனெனில், இருக்கை போன்ற மலசலகூடத்தில் அமரும்போது கால்களானது நாட்காலியில் அமர்ந்திருப்பதை போன்ற உணர்வையே தருகின்றது. ஆனால், குழி மலசலகூடத்தில் அமரும்போது முழங்கால்களை மடக்கிக்கொண்டு அமர வேண்டுமென்பதால் பலர் சிரமப்படுகின்றனர்.  இதன்போது, கால்களின் தசைநார்கள் இறுக்கமாகி நோவை ஏற்படுத்துவதாக பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.  

அமரும்போது அதற்கென சில முறைகள் உள்ளன. இம்முறைமைகளை பின்பற்றாமையே இன்று மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி போன்றவற்றுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.  

இதனை கருத்திற்கொண்டு நிறுவனமொன்று, 'ஸ்கொட்டி பொட்டி' என்ற பெயரில் மலம் கழிப்பது எவ்வாறு என்பதை விளக்கும் வகையிலான விவரணப்படத்தை வெளியிட்டுள்ளது. அவ்விவரணப் படத்தில் முப்பரிமாண தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட பறவையொன்று இருக்கைப் போன்ற, மலசலகூடத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை விளக்குகின்றது.

அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த விவரணப்படத்தை, இதுவரை 130,500 பேர் லைக் செய்துள்ளனர். 

'புதிய மலசலகூடத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பாக நமது முன்னோர் குந்தியிருத்தல் முறைமையையே பின்பற்றினர். பெரும்பான்மையான மக்கள் தற்போதும் அம்முறைமையையே பின்பற்றி வருகின்றனர்' என மேற்படி விவரணப் படத்தை வெளியிட்டுள்ள இணையத்தளம் கூறியுள்ளது. 

இவ்விவரணப் படத்தை பார்வையிடும் பலர், தமது வழமையான செயற்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகலும் அது உடல் நிலையை இலகுவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 'இந்த விவரணப்படத்தை மிகவும் விரும்புகிறேன். நான் கர்ப்பிணியாக இருக்கும்காலத்தில் மலசலகூடத்துக்குச் செல்லும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். அப் பிரச்சினைக்கு  தற்போது  தீர்வு கிடைத்துவிட்டது. அற்புதமான அறிமுகத்துக்கு மிக்க நன்றி' என கரன் கோல்ஹன் கூறியுள்ளார்

'நான் மீண்டும் எனது சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக உணர்கின்றேன்;. கழிப்பறைக்குச் சென்றால் இருக்கையை 4 அங்குலத்துக்கு உயர்த்த வேண்டியிருந்தது. தற்போது அது தேவையில்லை என நினைக்கிறேன்' என்று பென் ரொக்வெல் என்பவர் கூறியுள்ளார்.      

எனவே, மலசலகூடத்தில் சென்று அமர்வதில் உள்ள சிக்கல் நிலை இந்த விவரணப்படத்தால் தீர்க்கப்பட்டுள்ளது எனலாம்.

இதேவேளை, இருக்கை போல் அமைந்துள்ள மலசலகூடத்தில் தொற்நோய்கள், தோல் நோய்கள் பரவும் அபாயம் அதிகமிருப்பதால் அது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

நகர்புறங்களிலுள் பொதுமலசலகூடங்கள், அலுவலகங்களிலுள்ள மலசலகூடங்களை பயன்படுத்துவர்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருப்பது சிறந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .