2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

சுமத்ரான் வகை காண்டாமிருகம் அழிந்துவிட்டதாக மலேசியா அறிவிப்பு

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் போர்னியா தீவில் வசித்துவந்த இமான் என்ற 25 வயது நிரம்பிய பெண் காண்டாமிருகம் புற்றுநோயால் உயிரிழந்தது. இதேபோல் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் சபா கடந்த மே மாதம் இறந்தது. 

மீதமிருந்த ஒரே பெண் காண்டாமிருகமும் தற்போது உயிரிழந்துவிட்டது. எனவே தங்கள் நாட்டில் சுமத்ரான் வகை காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசியா அரசு அறிவித்துள்ளது. 

ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் பரவலாக காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. 

தற்போது வெறும் 80 காண்டாமிருகங்கள் மட்டுமே வாழ்வதாகவும் இந்தோனேஷியாவில் அவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .