A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயற்கைக்கு முரணாக 14 வயதுடைய இளம்பெண் 6 அடி 9 அங்குலம் வளர்ந்திருக்கிறார். உலகிலுள்ள ‘உயரமான டீன்ஏஜ் பெண்’ என இவரினை குறிப்பிடுகிறார்கள்.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி பிரேஸிலில் பிறந்த 'எலிசானி சில்வா' என்னும் இப்பெண், சிறுவயதிலிருந்து வழமைக்கு மாறான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறார். 14 வருடங்களும் 11 மாதங்களும் நிறைவடைந்துள்ள இவரது தற்போதைய உயரம் 6 அடி 9 அங்குலமாகும். இன்னமும் எலிசானியின் வளர்ச்சி தொடர்கிறது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 6 அங்குலங்கள் வளர்வதாக இவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
அளவுக்கு மீறிய ஹோமோன்களின் உற்பத்தியே இவரது அசுர வளர்ச்சிக்குக் காரணமென குறிப்பிடுகின்றனர். சக தோழிகள்போல் தன்னால் சுதந்திரமாக பாடசாலைக்கு செல்லமுடியவில்லை என எலிசானி வருத்தப்படுகிறார். நம்பிக்கையில் தளர்வில்லாத இவரது இலட்சியம் மொடலிங் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும். அதற்கான வாய்ப்புக்களும் தற்சமயம் எலிசானாவை தேடி வரத்தொடங்கியுள்ளதால், முறையாக மொடலிங் பற்றி கற்றுவருகிறாராம்.




7 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026