2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இங்கிலாந்து ஜோடிக்கு இலங்கையின் 2,000 அடி உயர மலை உச்சியில் திருமணம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

உலகில் பல்வேறு சாதனைகளை ஈடுபடுவதில் பலர் ஆர்வம் காட்டி வரும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்ரிமார்க் வெரியர் லிலியாஸ் மற்றும் மெடலின் லிலிவர் டேபுல் ஆகிய இருவரும் தனிமையில் திருமணம் செய்து கொள்ள எண்ணி இலங்கைக்கு வந்து சுமார் 2,000 அடி உயரத்தில் இருந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று பண்டாரவளை நாயபெத்த லிப்டன் சீட் மலை உச்சியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களும், விவாகத்தை நடத்தி வைத்தவர்களும் மாத்திரம் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர்களது திருமணம் சிங்கள கலாச்சார முறைப்படி எளிமையாக இடம்பெற்றது. இதற்கு பண்டாரவளை நகர பிதா சாட்சியாளராக ஒப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • nnjihan Saturday, 15 January 2011 04:41 PM

    இப்படியும் ஒரு ஆசை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--