2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பருமன் மிகுந்த விமானப் பணியாளர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கிய விமான சேவை நிறுவனமொன்று அதிக எடையுடன் காணப்பட்ட 28 விமானச் சிப்பந்திகளை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்ததுடன் அவர்கள் உடல் மெலிவதற்காக 06 மாதக்கால அவகாசம் கொடுத்துள்ளது.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 13 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பணியாளர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  துருக்கி நாட்டு நாளிதழான 'ஹாபர் டர்க்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அவர்களது உடலை அளவாக வைத்துக்கொள்ளும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக அந்நாளிதழ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானங்களில் பணிபுரிபவர்களுக்கு தோற்ற விடயத்திலும் நடமாடும் விடயத்திலும் நிறையும் உயரமும் முக்கியமானதாக காணப்படுகின்றது என்று 'டர்கிஸ் எயார்லைன்ஸ்' விமான சேவை நிறுவனம் அறிவி;த்துள்ளது.

விமான ஊழியர் சங்கத்தின் தலைவரான இஸாட் லெவி;, தான்; மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டுமானால் 22 இறாத்தல் எடை குறைக்க வேண்டும் என தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 'டர்கிஸ் எயார்லைன்ஸ்' நிறுவனமானது ஐரோப்பாவில் 4 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--