2021 ஜனவரி 16, சனிக்கிழமை

உலக சாதனை உருளைக்கிழங்கு

Kogilavani   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பிரிட்டனிலுள்ள 8 இறாத்தல், 04 அவுன்ஸ் (3.75 கிலோகிராம்) நிறையுடைய கிழங்கொன்று  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்காக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

பீற்றர் கிளாஸ்புருக் என்பவரின் தோட்டத்தில் வளர்ந்த இந்தக் கிழங்கு முந்தைய உலக சாதனைக்குரிய உருளைக்கிழங்கை 9 அவுன்ஸ்களால் தோற்கடித்துள்ளது.

இந்தக் கிழங்கை உற்பத்தி செய்த பீற்றர் கிளாஸ்புருக், இச்சாதனையால் மகிழ்வின் உச்சியில் மிதக்கிறார். இந்தக் கிழங்கு அண்மையில் பிரித்தானிய தேசிய பூங்கா நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

altநோர்தம்ப்டன் பிராந்தியத்தைச்  சேர்ந்த 66 வயதான பீற்றர் இதற்கு முன்பு தனது வீட்டுத்தோட்டத்தில் பல மரக்கறிகளை வித்தியாசமான முறையில் வளர்த்து சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் 17 அடி உயரமான கரட், 21 அடி உயரமான பீட்ரூட் மற்றும் 13 இறாத்தல் நிறையுடைய முள்ளங்கி போன்றவையும் அடங்குகின்றன.

இத்தகைய மரக்கறிகளை வளர்ப்பதின் இரகசியம்  சரியான விதையை தெரிவு செய்வதில் ஆரம்பிக்கிறது. அவற்றை எவ்வாறு வளர்ப்பது என்பதை கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு அதிக பிரயத்தனங்கள் தேவைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .