Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 12 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீரென சுயமாக தனித்து நீந்திப் பழகவேண்டும் என்று விரும்பிய வாத்து குஞ்சு ஒன்றை பெரிய வாத்தொன்று தண்ணீரில் மூழ்கவைத்து பாடம் கற்பித்த சம்பவத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது கமெராவில் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரிலுள்ள குளமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிய வாத்துக்குஞ்சொன்று தனியாக நீந்த முற்பட்டது. அவ்வேளையில் அதனது தாய் அங்கிருக்கவில்லை. இந்நிலையில் மற்றொரு பெரிய வாத்தொன்று விரைந்து வந்து அவ்வாத்துக்குஞ்சின் காலைப் பிடித்து தூக்கியது. அதையடுத்து ஒரு தடவை அக்குஞ்சை நீரில் மூழ்கவைத்த பின்னர் அதை அதன் தாயிடம் கொண்டுசென்று விட்டது.
23 வயதான ஆர்மென் வேர்த் என்பவர் இக்காட்சியை படம்பிடித்துள்ளார். 'அந்த வயதான வாத்து ஏற்கெனவே தனது வாத்துக் குடும்பத்திலுள்ள குஞ்சுகள் சிலவற்றை இவ்வாறு பறிகொடுத்த அனுபவத்தைக் கொண்டிருப்பதைப் போல் தென்பட்டது. அதனால் மேற்படி வாத்துக்குஞ்சுக்கு பாடம் கற்பிக்க அது தீர்மானித்திருக்கலாம்' என ஆர்மென் வேர்த் தெரிவித்துள்ளார்.
42 minute ago
4 hours ago
kindheart Saturday, 13 November 2010 05:17 PM
நீரில் மூழ்கடித்து மனிதர்களை கொள்ளும் காலத்தில் இப்படியொரு அதிசயம், ஏய் மனிதர்களே!! இந்தப் பாடம் உங்களுக்கே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago