2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரியை செக்ஸ் கருவியினால் தாக்கிய பெண்

Kogilavani   / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை செக்ஸ் கருவியினால் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலினோய் மாநிலத்தைச் சேர்ந்த கரோலி பில்ட்ஸ்டென் எனும் 56  வயதான பெண், உள்நாட்டு பொலிஸ் அதிகாரி ஜெய் பெட்ரிக் என்பவரை தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். 'பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் சாதனமொன்றினால்'| தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோலி பில்ட்ஸ்டென் உணவு விடுதியொன்றில் உணவுக்கான கட்டணத்தை செலுத்தாமல் சென்றமை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர் ஜே பட்ரிக் குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று முறைப்பாடுக் குறித்து விசாரித்துள்ளார். அப்போதே அவர் மீது கரோலி பில்ட்ஸ்டென் செக்ஸ் கருவியொன்றினால் தாக்கியுள்ளார்.

தற்போது பில்ஸ்டென் கைது செய்யப்பட்டு பொலிஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோபம் கொண்டு பொலிஸ் அதிகாரியொருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டும்இ திருட்டுக் குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
 
 


  Comments - 0

 • xlntgson Sunday, 14 November 2010 08:21 PM

  செக்ஸ் கருவி என்றால் என்ன?
  அதில் தாக்குதல் நடத்துவது எப்படி?
  எப்படி, எனது மூளை வேலை செய்யும் வேகம்?
  நான் யாரை தாக்க நினைக்கிறேன் என்பது இரகசியம்!
  உலகில் சூனியம் பொய் என்பதை பொய்யாக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
  palynology: தூசியின் மூலம் துப்பறியும் முறை ஆராய்ச்சி வெற்றி பெற்று வருகின்றதாம் அதன்படி எதிலும் எங்கும் தங்கிவிடும் காற்றில் அடித்துச்செல்லப்படும் மகரந்ததுகள்கள் மூலம் கொலையைக்கூட துப்பறிந்து விடமுடியுமாம்.கொலையை மட்டுமா இந்த கண்டுபிடிப்பினால் ஒருவருக்கும் இரகசியம் இல்லாமல் போகும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .