Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் தனது தாயார் யாரென கண்டறியும் நீண்டகால முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உலகில் தாடியுள்ள பெண்ணாக பிரபலமான விவியன் வீலரே அவரது தாய் ஆவார்.
33 வயதான ரிச்சர்ட்ஸ் லோரன்க், 62 வயதான தனது தாய் விவியன் வீலரை அண்மையில் கண்டறிந்துள்ளார். முன்னொரு காலத்தில் சர்கஸ் குழுவொன்றில் பணியாற்றியவர் விவியன் வீலர்.
கான்ஸாஸ் மாநில சமூக மற்றும் புனர்வாழ்வு திணைக்களமானது 6 வார காலமாக புலனாய்வு விசாரணை நடத்தியபின் ரிச்சர்ட்ஸ் லோரன்க்கு தனது தாயை சந்திப்பதற்கான ஏற்பாடை செய்துள்ளது.
விவியன் வீலர் குறித்த அனைத்து விடயங்கைளையும் அவரின் மகனான லோரன்க், அறிந்து வைத்திருந்தார்.
இப்பெண்ணுக்கு மிக இளமையான வயதிலேயே அசாதாரணமான முறையில், தாடி வளரத் தொடங்கிவிட்டது. அத்துடன் விவியன் வீலர் பிறக்கும்போது அவருக்கு ஆண், பெண் ஆகிய இரு பாலுறுப்புகளும் காணப்பட்டன.
முகத்தில் மயிருடனும் இருவகை பாலுறுப்புகளுடனும் காணப்பட்ட தனது குழந்தையை கண்ட வீலரின் தாயாருக்கு பெண் குழந்தையே தேவைப்பட்டது. அதனால் அவர் வீலரின் ஆணுறுப்பை அகற்றிவிடுமாறு மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
வீலரின் நிலையை அறிந்த அவரது தந்தை, சங்கடத்திற்குள்ளான போதிலும் தனது மகளை 5 வயதில் சர்க்கஸ் மற்றும் கண்காட்சிகளில் பங்குபற்ற அனுப்பிவைத்தார். அதனூடாக வீலர் மாதாந்தம் 1000 அமெரிக்க டொலரை சம்பளமாக பெற்று அதனை அவரது குடும்பத்திற்கு அனுப்பிவைத்தார்.
பின்னர், அவர் உலகிலே மிக நீண்ட தாடியை கொண்ட பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டார். அவரது தாடியின் நீளம் 11 அங்குலமாகும்.
அவருடைய மகன் ரிச்சர்ட் 3 வயதாக இருக்கும் போது விவியனிடமிருந்து இருந்து எடுக்கப்பட்டு, 7 வயதிலிருந்து வேறொரு குடும்பத்தால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார்.
தற்போது தனது மகனுடன் வசிப்பதற்காக கலிபோர்னியாவிலிருந்து கான்ஸாஸுக்கு இடம்பெயர்வதற்கு வீலர் தீர்மானித்துள்ளார்.
44 minute ago
7 hours ago
7 hours ago
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
7 hours ago
7 hours ago
20 Oct 2025