2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பார்பி பொம்மைகளை நிர்வாண லெஸ்பியன்களாக சித்தரித்தவர்களுக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகெங்கும் பிரபலமான பார்பி பொம்மைகளை லெஸ்பியன்களாக சித்தரித்து கலண்டர் தயாரித்த ஓவியர்களுக்கு எதிராக பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடுக்கவுள்ளது.

ஆர்ஜென்டினாவின் பியூனர் அயார்ஸை சேர்ந்த கலைஞர்களான பிரேனோ கோஸ்டா,  கில்ஹேர்ம் சொவ்ஸா ஆகியோர் பொம்மை தயாரிப்பு நிறுவனமொன்றுடன் இணைந்து மேற்படி கலண்டர்களை தயாரித்துள்ளனர்.

இக்கலண்டரின் சில மாதங்களுக்கான பக்கங்களில் நிர்வான பார்பி பொம்மைகள் காணப்படுகின்றன. வேறு சில மாதங்களுக்கான பக்கங்களில் இரு பார்பி பொம்மைகள் அந்தரங்க நிலையில் காணப்படுகின்றன.

ஓவியர்கள் கொஸ்டா மற்றும் சொவ்ஸா கருத்துத் தெரிவிக்கையில்,  'சமூகத்தில் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு செக்ஸ் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கலண்டர் வெளிப்படுத்துகிறது' என்று கூறியுள்ளனர்.

எனினும் பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனமான மாடெல்லின் ஐப்பிய பேச்சாளர் இது தொடர்பாக கூறுகையில்,  'பார்பி பொம்மைகள் இவ்வாறு வரையப்படுவதை நாம் விரும்பவில்லை. குறிப்பாக எமது  இலச்சினையுடன் இப்படி வரையப்படுவதை நாம் விரும்பவில்லை. இக்கலண்டர்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்' என்றார்.
 


  Comments - 0

  • xlntgson Wednesday, 08 December 2010 09:23 PM

    வழக்கு முடிவதற்குள் அங்கு அநேகமான பெண்கள் லெஸ்பியன்களாக மாறி இருப்பார்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--