2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சவூதியில் தங்கையை மணப்பெண்ணாக காட்டி, மகளுக்கு திருமணம் நடத்திய நபர்

Super User   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாயைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து 12 மணித்தியாலங்களுக்குள் மனைவியை விவகாரத்து செய்துள்ளார்.

திருமணம் குறித்து பேசப்பட்டபோது தனக்கு ஒரு பெண்ணை மணமகளாக காட்டப்பட்டதாகவும் ஆனால் திருமண வைபவத்தின்போதுமணமகளின் குடும்பத்தினர் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நபர் கூறியுள்ளார்.

தந்தையை இழந்த 26 வயதான மணமகளுக்கு மணமகன் தேவையெனக் கேட்டு அப்பெண்ணின் சகோதரர்  தன்னை அணுகியதாக மேற்படி மணமகன் தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் பின்னர் கணவனும் மனைவியும் ரியாத் நகரிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சென்றனர். அங்கு மணமகள் தனது முகத்திரையை விலக்கியபோது மணமகன் அதிர்ந்தார். தான் திருமணம் செய்ய சம்மதித்த பெண் அவரல்ல என அந்நபர் கூறினார்.

இது தொடர்பான விசாரணையின்போது, திருமண பேரம் நடத்திய நபர் அழகில்லாத தனதுமகளுக்கு திருமணம் கைகூடாததால் தனது தங்கையை மணப்பெண்ணாக காட்டிவிட்டு, தனது மகளை திருமணம் செய்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தான் பெற்ற மஹர் பணத்தையும் அவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த மதகுருவான ஷேக் அப்துல் அஸீஜ் அல் ஷேய்க் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில். ஆண்கள் மோசடியான திருமணங்களை ரத்துச் செய்யமுடியும் எனக் கூறியுள்ளார்.
 


  Comments - 0

 • A.S.M.Najeemdeen Tuesday, 25 October 2011 07:11 PM

  intha விடயத்தில் ஒவ்வொரு தகப்பனும் purinthukollavendum.

  Reply : 0       0

  nifrash Sunday, 16 October 2011 03:21 PM

  முதலில் இஸ்லாமிய திருமண சட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் திருமணம் செயுதுகொள்ளும் இருவரும் சம்தம் தெரிவிக்க வேண்டும்...இல்லவீடின் திருமணம் செல்லாது...தயவுசெய்து இவ்வறான சம்பவங்கள் மூலம் இஸ்லாத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் ....

  Reply : 0       0

  hassanqs Friday, 18 November 2011 06:32 PM

  இதுல நான் செல்ல ஒன்றும் இல்லை

  Reply : 0       0

  azzuhoor Monday, 10 October 2011 08:23 AM

  முகத்திரையை வைத்துக்கொண்டு சிலர் செய்யும் தப்புகளுக்கு அளவில்லாமல் போச்சு.
  இஸ்லாத்தில் முகத்திரை கட்டாயமாக்கப்படவில்லை. ஏன்தான் ஊரை ஏமாத்துராங்களோ?

  Reply : 0       0

  Fariz Friday, 30 December 2011 05:08 PM

  அவசர புத்தி. மாப்பிள்ளைக்கு
  இன்னும் நல்ல நிதானம் தேவை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--