2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பாலினாலான ஆடைகளை பெஷன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் விஞ்ஞானி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விஞ்ஞானியொருவர் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட  ஆடைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆடைத்தொழிற்துறையுடன் கைகோர்த்துள்ளார்.

ஜேர்மனி, ஹனோவரைச்  சேர்ந்த விஞ்ஞானியான அன்கி டொமாஸ்க் (வயது 28) எனும் பெண்ணே இவ்வாறான பாலினால் தயாரிக்கப்பட்ட ஆடையை பெஷன் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பாலுடன் வேறு பல பதார்த்தங்களையும் சேர்த்து விசேட 'உயிரியல்' ஆடைகளை உருவாக்கியுள்ளார். இந்த ஆடைகள் பெஷன் தொழில்துறையில் புதிய வகையான போக்காக அமையுமென அவர் கூறியுள்ளார்.

பாலினால் தயாரான இந்த  புடைவையானது தோலை சிறப்பாக பேணும் புரதத்தையும் கொண்டுள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • Mohamed Sunday, 23 October 2011 04:39 AM

  xlntgson என்னதான் சொல்ல வர்ரிங்க? உங்களுடைய comment எல்லாம் குதர்க்கமாகவே இருக்கிறது! கொஞ்சம் புரியும் படியா எழுதினா பிரயோசனமா இருக்கும்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 23 October 2011 10:15 PM

  mohamed, பாலாடை என்பது milk cream மில்க் கிரீம் அல்ல. குதர்க்கம் எது என்பதை குறித்துச் சொல்லுங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு, < xlntgson @gmail.com > பதில் கூறுகின்றேன். நான் குதர்க்கம் செய்வதில்லை. உங்களுக்கு விளங்காவிட்டால் ஒருவருக்குமே விளங்காதா? எது உங்களுக்கு விளங்கவில்லை?
  நான் குதர்க்கவாதியாக இருந்தால் ஒருவருக்கும் பதில் கூறமாட்டேன். எனது கருத்துகளில் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் ஆசிரியருக்கும் முறைப்படலாம். நான் ஒழுங்குமுறை மீறேன்.

  Reply : 0       0

  xlntgson Monday, 24 October 2011 04:21 PM

  Ramesh & mohamed, செய்தியில் பாலினாலான 'உடை' என்று தலைப்பு இருந்திருந்தால் இந்த தர்க்கம் (குதர்க்கம்?) ஏற்பட்டிருக்காதோ?
  ஆடை என்றதும் எனக்கும் பாலாடை பற்றி பாடம் சொல்ல தோன்றி இருக்காது. பாலடையோ அது? சென்னை வழக்கு பாலாடையாக இருக்கும். அதனால் தான் பழைய- பத்மினி நடித்த கருப்பு வெள்ளைப் படத்துக்கு அந்த பெயரை வைத்திருந்தனர் என்று நினைக்கின்றேன். ஒருவருக்கு பிடிக்காததெல்லாம் குதர்க்கம் அல்ல. குதர்க்கம் பற்றி நான் இப்போது பாடம் சொல்ல வேண்டியது வருமோ என்று அஞ்சி நிறுத்திக்கொள்கின்றேன். நன்றி தமிழ் மிரருக்கு.

  Reply : 0       0

  Ramesh Saturday, 22 October 2011 02:07 AM

  பாலாடை என்பது இதைத்தானா?

  Reply : 0       0

  xlntgson Saturday, 22 October 2011 04:28 PM

  பாலாடை என்பது இப்போது வழக்கில் இல்லை இது பிள்ளைகளுக்கு பால் & மருந்து ஊட்ட கண்ணாடியிலான ஒரு திரவ & பாலூட்டும் சாதனம் இப்போது பிளாஸ்டிக்கில் வருகின்றது. கண்ணாடியிலானதே ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை பால் பொருள் கொண்டு செய்த ஆடை என்போம்! (பசிக்கு சாப்பிடலாம் என்பார்களோ?)
  பாலுக்கு மேல் மிதக்கும் ஆடை வெண்ணெய் அல்லது நெய், பாலாடை என்று ஒரு படம் பத்மினி நடித்து வெளி வந்தது பல்லாண்டுகளுக்கு முன். அதிலும் நெய் என்ற பொருளில் அல்ல நான் ஏலவே கூறிய பாலருத்தி என்னும் சாதனம் தத்துப் பிள்ளை குறித்த ஒன்றுக்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--