2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

உலகின் முதலாவது பாலியல் பாடசாலை ஆஸ்திரியாவில் திறக்கப்பட்டது

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பாலியல் பாடசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த தொலைக்காட்சி அறிவிப்பாளரான யேல்வா மெரியா தொம்ஸன் எனும் பெண்ணே இப்பாடசாலையை உருவாக்கியுள்ளார்.

'ஆஸ்திரிய சர்வதேச செக்ஸ் ஸ்கூல்' எனும் இப்பாடசாலை ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அமைந்துள்ளது. இப் பாடசாலையில் சிறந்த காதலர்களாகுவதற்கான கலைகள், எதிர்பாலரை வசீகரிக்கும் கலைகள் என்பன கற்பிக்கப்படுமாம்.

இப்பாடசாலையில் கற்பவர்களிடம் ஒரு தவனைக் காலத்திற்கான கட்டணமாக 2 இலட்சம் ரூபாய் அறிவிடப்படுகின்றன.

16 வயதக்கு மேற்பட்ட எவரும் இந்த 'பிரயோக பாலியல் பாடசாலையில்' பதிவுசெய்து கொள்ளலாமென பாடசாலையின் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

ஆண், பெண் இருபாலாருக்குமான இப்பாடசாலையில் மாணவ மாணவிகள் பாடசாலையுடனான விடுதியொன்றில் தங்கியிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவார்கள். அங்கு மாணவர்கள் தமது 'வீட்டுவேலைகளை' செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுவர். இக்கற்கைநெறியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

'இப்பாடசாலையில் கோட்பாடுகள் கற்பித்துக் கொடுக்கப்படுவதில்லை. மிகவும் செயன்முறைக் கல்விதான் நடைபெறும். பாலியல் நிலைகள், உடற்கூறு அம்சங்கள் என்பவை கற்றுக்கொடுக்கப்படும்' எனவும் தலைமை ஆசிரியை கூறியுள்ளார்.

இப்பாடசாலை பாரியளவில் வெற்றியளிக்குமென பாடசாலையின் பேச்சாளர் மெலடி கேர்ஸ்ச் நம்பிக்கை கொண்டுள்ளார்.  எவ்வாறெனினும் இப்பாடசாலை ஏற்கெனவே ஆஸ்திரியாவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ஜோடியொன்று பாலியல் உறவுகொள்வது போன்ற காட்சியடங்கிய விளம்பரமொன்றை இப்பாடசாலை வெளியிட்டது. இவ்விளம்பரத்தை தொலைக்காட்சியொன்று தடை செய்துள்ளது.

'இவர்கள் மிக ஸ்டைலான வகையில் செக்ஸ் விற்பனை நடத்துகிறார்கள்' என இத்திட்டத்தை எதிர்க்கும் ஒருவர் கூறியுள்ளார்.


  Comments - 0

 • andavaayaan Thursday, 09 February 2012 04:56 AM

  இங்கயும் இந்த மாதி பாடசாலை திறக்க மாட்டாங்களா . ?

  Reply : 0       0

  Rifaas Monday, 05 December 2011 02:46 PM

  விபச்சாரத்தின் நவீன வடிவம்; கல்வியின் பெயரால்...

  Reply : 0       0

  appaavi Sunday, 11 December 2011 06:22 PM

  அடச்சீ.....!

  Reply : 0       0

  Rajiswaran Friday, 02 December 2011 01:12 AM

  அவர்களுக்கு இதை சொல்லிக்கொடுக்கவும் வேண்டுமாக்கும்.

  Reply : 0       0

  mtmsiyath Friday, 02 December 2011 01:21 AM

  சும்மாவே சீரழியும் சமூகம், பாலியல் பாடசாலை இன்னும் உரம் ஊட்டுவதாக அமையுமே!

  Reply : 0       0

  Mei Friday, 02 December 2011 11:14 PM

  nadum naattu makkalum naasam.

  Reply : 0       0

  ummpa Saturday, 03 December 2011 04:43 AM

  உங்களுக்கு எதுக்கு இப்படியொன்று. ஒ மறந்துவிட்டன் . நீங்கள் இப்பதான் காட்டில் இருந்து கட்டிடதுக்கு பிரவேசிக்கிறீர்கள் . இனி அடுத்த தொல்லை AIDS மாறி EXTRA AIDS ஆகிவிடும். வாழ்த்துக்கள் ......

  Reply : 0       0

  Dumeel Dum Saturday, 03 December 2011 09:24 PM

  அடி செருப்பால........இப்படியும் ஒரு படிப்பா?

  Reply : 0       0

  nilam Sunday, 04 December 2011 02:59 AM

  லூசு கூட்டம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X