2021 ஜனவரி 27, புதன்கிழமை

பலூன்களினால் ஒரு அறை...

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒவ்வொருவரும் தான் வசிக்கும் அறையை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதில் தீர்மானமுடையவர்களாக இருப்பார்கள். பொழுதுபோக்கான நேரங்களில் தாம் வசிக்கும் அறையை அழகுபடுத்த ஆக்க வேலைகளில் ஈடுபடுவர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.

ஆனால், அமெரிக்காவின் உட்டா மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் தனது அறையை 2600 பலூன்களால் அலங்கரித்து பார்வையளர்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெர்மி டெல்போர்ட் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு பலூன்களால் தனது வீட்டின் அறையை அலங்கரித்துள்ளார்.

இதற்காக அவர் மூன்று நாட்களை செலவிட்டுள்ளார்.  தொழில்முறை பலூன் கலைஞரான இவர் பொழுதுபோக்காக பலூன் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நபரும் அவரது மனைவியும் மிகவும் நுட்பமாக திட்டமிட்டு இந்த பலூன்களிலான அறையை வடிவமைத்துள்ளனர்.

இவர் பலூன்களால் தனது வீட்டின் அறையை நிர்மாணிக்கும் காட்சிகளை அவரது மனைவி வீடியோ காட்சிகளாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பலூன் விளக்கு, பலூன் கதவுகள், பலூன்களிலான அப்பில்கள் நிரப்பப்பட்ட பழ கிண்ணங்கள், பலூன் அலுமாரி, பலூன் இருக்கைகள் என அனைத்துமே பலூன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'பொழுது போக்காக இருந்தாலும் வித்தியாசமான முறையில் எதையாவது வடிவமைக்க வேண்டும்.  எனது மனைவியும் நானும் மூன்று நாட்களை செலவு செய்து இந்த அறையை வடிவமைத்துளளோம்' என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .