2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஊசிமுனையில் வித்தைகள்.....

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


உடலில் ஊசியொன்று குத்தினால் வீறிட்டு அலரும் அநேகமானோரை நாம் பார்த்ததுண்டு. ஆனால், இங்கு சிலருக்கு அவை ஜலேபியை போல் உள்ளது. 

உடல் துளையிடல் மற்றும் பச்சைக்குத்துதல் தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற உடல் வருத்தும் கலைகளில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் பலர் இரத்தம் சிந்தி தமது திறமைகளை வெளிபடுத்தியுள்ளனர்.

மேற்படி ஆர்வலர்கள்; கம்பிகளால் தமது உடலை துளையிட்டும் கம்பிகளில் தொங்கிய நிலையிலும் ஊசி முனைகளில் தமது முகங்களை அலங்கரித்தவாறும் இம்மாநாட்டில் பங்குற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்மாநாட்டில் பச்சைக்குத்திய கலைஞர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியானது அவர்களது செயற்பாட்டில் தெரிகின்றது.

கொலம்பியா மெடலின் பகுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பங்கேற்;ற கலைஞர்களில் சிவப்பு நிறத்திலான தலைமுடியைக் கொண்ட பெண்ணொருவர் தனது முதுகில் உலோகத்தினால் துளையிட்டு அந்தரத்தில் அமர்ந்த நிலையில் காணப்பட்டமை தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .