2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாமியார கொதிநீர் ஊற்றி கொலை: மருமகளுக்கு சிறை

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமியரை கொதிநீர் ஊற்றி கொலைசெய்த மருமகளுக்கு 41 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கொலராடோ ஸ்பிரிங் பகுதியைச் சேர்ந்த எலிசெபத் ரெய்னி என்ற 20 வயது பெண்ணுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது மாமியரான டெபோரா ரெய்னோ (வயது 59) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் மிகவும் கொடூரமாக கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

எலிசெபத்துக்கு குழந்தையொன்று பிறந்துள்ளது. தனது கணவர், மாமியார் மற்றும் குழந்தையுடன்; தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த மேற்படி பெண் ஒருநாள்,   தனது மாமியாரை கொதிநீரில் துக்கி வீசியுள்ளதுடன், சலவைத்தூளை மூக்கிலும் வாயிலும் ஊற்றி குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர், கணவர் வருவதற்குள் மாமியாரின் உடலை காற்றடைக்கப்பட்ட மெத்தையில் மறைத்து வைத்துள்ளார்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற பொலிஸார் குறித்த பெண்ணை கைதுசெய்வதற்காக வந்தபோது குழந்தையானது கத்தியொன்றை காட்டி அழுதுள்ளது. இதன்போது குழந்தையை பொலிஸாரை நோக்கி வீசிவிட்டு அப்பெண் தப்பிக்க முயன்றுள்ளார்.

எனினும் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கணவனும் மனைவியும் விவாகரத்தான நிலையிலேயே வாழ்ந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

'என்னை உனது மனைவிக்கு பிடிக்கவில்லை' என தனது தாயார் கூறியதாகவும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நீண்ட நாட்கள்; வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்ததகவும் குறித்த பெண்ணின் கணவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--