2021 மே 08, சனிக்கிழமை

தாய், தந்தையை பதம் பார்த்த குண்டு

Gavitha   / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுடத்தெரியாது, கண்ட இடங்களில் சுட்டுவிடும் ஹீரோக்களை திரைப்படங்களில் அதிகம் காண்கின்றோம். இதற்கு சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

3 வயது சிறுவனொருவரின் கையிலிருந்த கைத்துப்பாகியொன்று தற்செயலாக வெடித்ததில், சிறுவனின் தந்தை மற்றும் கர்ப்பமாக இருந்த தாய் மீது குண்டு பாய்ந்த சம்பவம் தொடர்பிலான செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த தம்பதிகள் அவர்களுடைய 3 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் அல்புகெர்கு நகரிலுள்ள ஹோட்டலில்; தங்கியுள்ளனர். இதன்போது, சிறுவன் தனது தாயின் கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.

இதன்போது, தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்த குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த கர்ப்பிணியான அவரின் மனைவியின் வலது தோற்பட்டையிலும் பாய்ந்தது.

இச்சம்பவத்தையடுத்து, சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தையின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் சிறுவனின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு துப்பாக்கியை வைத்து விளையாடி சிறுவர்கள் பிறரை சுடும் சம்பவம் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X