2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அனலைதீவு கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கடலரிப்பு

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம் - அனலைதீவு கரையோரப்பகுதிகள் தொடர்ந்தும் கடலரிப்புகளுக்குள்ளாகி வருவதாகவும் இதனை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டுமெனவும், அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனலைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளிலும் கூடுதலான இடங்கள் தொடர்ந்தும் கடலரிப்புக்குள்ளாகி வருவதாக பிரதேச மீன்வர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கடல் கரையோரமாகக் காணப்பட்ட கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் நாளாந்தம் கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் இதனை தடுக்கும் வகையில் கரையோரப்பகுதிகளுக்கு தடுப்பு சுவர்களை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் தெதரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோரப் பகுதிகளில் தமது மீன்பிடிப்படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் இல்லையெனக் குறிப்பிட்ட மீனவர்கள், தமக்கான மீன்பிடி இறங்குதுறைகளை அமைத்து தருமாறும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .