2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அரச அதிகாரிகள் அசமந்த போக்கை கைவிட வேண்டும்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் உதவி கோரி அரச அதிகாரிகளை நாடி வரும் மக்களை, உயர் பதவியில் இருப்போர் அலைக்கழிக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவில் உதவ முன்வரவேண்டும் எனவும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இ.செபமாலை அடிகளார் கோரினார்.

முரண்பாட்டுக்கு பின்னரான காயங்களை ஆற்றும் பணி தொடர்பாக பெண்களுக்கு கொள்கை விளக்கங்களை அறிவிக்கும் விசேட செயலமர்வு வியாழக்கிழமை(19), மன்னாரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். அதன்படி குறிப்பாக தமது பிரச்சினைகள் தொடர்பாக அரச அதிகாரிகளிடம் தெரிவித்தால் அரச அதிகாரிகள் உடனடியாக பதில்கள் தங்களுக்கு தருவதில்லை என கூறினர்.

அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கு பாதிக்கப்பட்ட மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது

இம்மக்களுக்கு இவ்வாறான அநியாயங்கள் செய்வது தடுக்கப்படவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .