2021 மே 15, சனிக்கிழமை

அரைக்கும் ஆலை இயங்கவில்லை

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலை எந்தவித செயற்பாடுகளும் இன்றி மூடிய நிலையில் காணப்படுகின்றது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜெயபுரம் தெற்கு பகுதியில் அரசசார்பற்ற நிறுவன நிதி உதவியுடன் வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மீள் கட்டியெழுப்பலும் உணவு பாதுகாப்பினை அதிகரித்தலும் எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயபுரம் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலை இயங்காத நிலையில் மூடி காணப்படுகின்றது.

கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட குறித்த அரைக்கும் ஆலையானது தற்போது இயங்காத நிலையில் காணப்படுகின்றது. இதனை இயங்க வைப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .