2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அறிவிப்பு கிடைக்காததால் போட்டியில் கலந்துகொள்ளாத மாணவர்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

அறிவிப்பு கிடைக்காததால் தேசிய விளையாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் இழந்த சம்பவமொன்று  பாலிநகரில் இடம்பெற்றுள்ளது.

துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாலிநகர் மகா வித்தியாலயம் வடமாகாண விளையாட்டில் பல்வேறுபட்ட விளையாட்டுகளில் பாலிநகர் மகாவித்தியாலய மாணவர்கள் முதல்நிலை பெற்றும் தேசியத்திற்க தெரிவாகியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற மாகாண மட்ட கபடி போட்டியில், இரண்டாது நிலை பெற்று தேசியத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.

கண்டி - அஸ்கிரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வடக்கை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பங்குகொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு எதுவித அழைப்புக்களும் தகவல்களும் துணுக்காய் கல்வி வலயத்தால் வழங்கப்படவில்லை என பாடசாலை மாணவர்களும் அதிபரும் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலைகளுக்கு இது தொடர்பிலான தகவல் தெரிவிக்கப்பட்டபோதும், பாலிநகர் மகா வித்தியாலயத்துக்கு தகவல் கொடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

பாலிநகர் மகா வித்தியாலயத்தில் இருந்து தேசிய மட்ட போட்டிக்கு  செல்வதற்காக 14 மாணவர்கள் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தவேளை இந்த ஏமாற்றத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .