2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற தொடர் ஆசிரியர் பற்றாக்குறையால், தமது மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக, பின்தங்கிய பிரதேச மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சுமார் 61 பாடசாலைகளில் அதிகளவான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகின்றது.

குறிப்பாக, துணுக்காய் மாந்தைக் கிழக்கு ஒட்டுசுட்டான் ஆகிய கல்விக் கோட்டங்களின் கீழ் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இதேபோல இடைநிலை வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளில் வெற்றிடங்களாக காணப்படுகின்ற அழகியல் பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடங்கள் ஆங்கில பாடத்துக்கான ஆசிரிய வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் வெற்றிடங்களாகவே காணப்படுகின்றன.

இதேபோன்று, உயர்தர வகுப்பகளைக் கொண்ட பாடசாலைகளில் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் கணித பாடத்துக்கான வெற்றிடங்கள் வத்தகப் பிரிவுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்றன.

இதனால், பின்தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் இன்றி பொருளாதார வலு இன்றி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமது மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X