2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'இபாட் திட்டத்தினூடாக பயன்பாடற்ற செலவுகள் இடம்பெறுகின்றன'

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான இபாட் திட்டத்தினூடாக கால்நடை வளர்ப்பு பயனாளிகளுக்கு தரமற்ற கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக பயனாளிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் குளத்தின் கீழான நீர்ப்பாசனக்கட்டுமானங்கள் விவசாயக்;குடும்பங்களின் வாழ்வாதாரத் செயற்திட்டங்கள் எனப்பல்வேறு திட்டங்கள் இபாட் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் அதிகளவான நிதி மாவட்டத்திற்கு பயன்படாத விதத்தில் செலவிடப்படுவதாக மக்கள் பிரதிநிதிகள் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு கால்நடைவளர்ப்போர் தெரிவு செய்யப்பட்டு இதுவரை 98 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட கால்நடைகள் தரமற்ற கால்நடைகள் என்றும் அதற்காக பயனாளிகள் உரிய முறையில் தெரிவு செய்யப்படவில்லை என்றும் விவசாயிகளாலும் பொதுமக்களாலும் சுட்டிக்காட்;டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்;பில் கருத்துத்தெரிவித்த இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன்,

இந்த குறைபாடுகள் பலராலும் முன்வைக்கப்பட்டபோதும் இவற்றை வழங்குவது தொடர்பில் எதுவும் சம்மேளனத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் திட்டத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்துக் கொள்வதே உசிதமானது. இங்குள்ள அதிகாரிகளது விளக்க நியாயப்பாடுகள் பொருத்தமற்றவை எனத்தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத்தெரிவித்த மாவட்;ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்,

இதுவரை பல்வேறு முறைப்;பாடுகள் எங்களுக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை ஆராயும் போது பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முறைப்பாடுகளில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் உண்மைத்தன்மை கொண்டவையாகவே காணப்படுகின்றன.

இதுவரை 98 கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கால்நடைகளின் தரம் பற்றி நீண்ட விசாரணைகளின் பின்னரே உறுதியான தகவலைக் கூறமுடியும். இது தொடர்பாக வடக்குமாகாண பிரதம செயலாளருக்கும் திட்டமுகாமையாளருக்கும் அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் பெருமளவான நிதி செலவிடப்படுகின்றபோதும் அவை உரிய முறையில் செலவிடப்;படாது மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்;படுகின்றன. இத்திட்டத்தின் கீழான விவசாயக்கிணறுகள் நெல் உலரவிடும் தளங்கள் என்பன விவசாய அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்களது காணிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொள்ளாது தங்களது சுய விருப்பில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அது சார்ந்த அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .