2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உலக சலரோக தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலக சலரோக தினமான இன்று செவ்வாய்க்கிழமை (24) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமென்று முன்னெடுக்கப்பட்டது. 

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ரஜனி அன்ரன் சிசில் தலைமையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் காலை 8 மணியளவில் ஆராம்பமான இவ்ஊர்வலம், மன்னார் வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து பிரதான வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சென்றடைந்தது.

தொற்றா நோய்த் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி அன்ரன் சிசில், மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எம்.சஜானி, முசலி வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ், பொது சுகாதார வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், தொண்டர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .