2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

‘எமது பிரதேசங்களில் முதலிட முன்வாருங்கள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முதலீட்டாளர்கள் எமது பிரதேசங்களில் முதலிடுவதற்கு முன்வரவேண்டுமென,  பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், நீண்டகாலமாக போரின் காயங்களால் அடியுண்ட எமது மக்களை பொருளாதார ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களையே சாருமென்றார்.

எமது போரட்டத்தை எவ்வாறு வழிப்படுத்தியிந்தீர்களோ  அவ்வாறு எமது தேசத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முன்வாருங்களெனவும் வலியுறுத்தினார்.

நாடுகளின் போராட்ட வரலாறுகளில் ஒரு வழியால் தோற்கடிக்கப்பட்ட இனம் மறுவழியால் முன்னேறி தமக்குரிய நாட்டை அமைத்திருக்கிறார்கள். அதே போல் நாமும் பொருளாதார ரீதியில் முன்நோக்கி நகர்வதற்கு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--