2021 மே 18, செவ்வாய்க்கிழமை

எமில் நகர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில் நகர் கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை, நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் வெள்ளிகிழமை(27) வழங்கிவைத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  எமில் நகரை சேர்ந்த 350  குடும்பங்களுக்கு குறித்த நிவாரண உதவி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. தலா ஒரு குடும்பத்திற்கு 1,300 ரூபாய் பெறுமதிமிக்க நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன . இதற்கான நிதியினை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் யாழ்.  மாவட்ட முகாமையாளர் எஸ்.கே.வசந்தன், மன்னார் பிரதேச செயலகத்தின் கிராம சேவகரின் நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெனாண்டோ ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .