2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

எரிபொருள் இருந்தும் காத்திருக்கும் வாகனங்கள்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

செட்டிகுளம் எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருந்தும்,  வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

செட்டிகுளம் நகர் பகுதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் லங்கா எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்துக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரமாகக் காத்திருந்தும், வாகனங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், குறித்த மீள்நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அசமந்தப் போக்கே, இந்நிலைமைக்குக் காரணமெனவும் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முறையிட்ட போதும், அதற்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எடுக்கப்படவில்லையெனவும், பொதுமக்கள் சாடினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .