2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஐஸுடன் கைதானவர் தப்பியோட்டம்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸட காவலில் இருந்து தப்பியோடிய சம்பவம், இன்று (13) அதிகாலை வேளையில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு - செம்மலை பகுதியில், ஐஸ் போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரை விஷேட அதிரடி படையினர் நேற்று (12) மாலை கைதுசெய்தனர்.

கைது செய்த நபரை, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்று (13)அதிகாலை 2.50 மணியளவில், குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது

இவ்வாறு தப்பிச் சென்றவர், செம்மலை பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என்றும் அவரிடமிருந்த போதைப்பொருளானது, மீன்பிடிப் படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருந்ததாகவும் அவரொரு  போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .