Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில், நேற்று (07) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர்.
மாணிக்கர் வளவைச் சேர்ந்த இருதரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் சிறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்சியாக நேற்றய தினம் இரவு வீடொன்றுக்குள் நுழைந்த இளைஞர் குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் நிறுத்தபட்டிருந்த ஓட்டோவும் சேததப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள், பெண் ஒருவர் ஆகியோர் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுபோதையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
24 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
51 minute ago
54 minute ago