Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த இழப்பீட்டு கொடுப்பனவுக்கான கோவைகள் அதிகம் காணப்படுகின்றதென, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு, மாவட்ட சொலயக மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரையாற்றுகையில்,
“22 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோமலைகள் 303 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இது இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வாக காணப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சின் இந்த செயற்றிட்டமானது கிடப்பில் கிடந்த பல பைல்கள் மீளஎடுக்கப்பட்டு அதற்கான கொடுப்பனவு வழங்குகின்ற ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் ஆறுதலாக அமைந்துள்ளது.
“இதில் 246 பொதுமக்களுக்கும் 46 அரச உத்தியோகத்தர்களுக்கும் இறந்த அல்லது காயமடைந்த 7 பேருக்கும் 4 சமயதலங்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
“முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் 1,866 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது 1,055 காயம் அடைந்தவர்களுக்கும் 2,474 பொதுமக்களுக்கும் 1,820 அரச உத்தியோகத்தர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளனது.
“இருப்பினும் இன்னும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த இழப்பீட்டு கொடுப்பனவுக்கான கோவைகள் அதிகம் காணப்படுகின்றது. இன்னும் 4,000க்கும் மேற்பட்ட கோவைகள் மாவட்டத்தில் இருக்கின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
2 hours ago