2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கடலட்டை பிடித்தவர்கள் விடுதலை

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நாச்சிக்குடா கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாச்சிக்குடா கடலில் அனுமதிப்பத்திரமின்றி கடந்த 14ஆம் திகதி கடலட்டை பிடித்த 7 பேரை கடற்படையினர் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 80 கிராம் நிறையுடைய கடலட்டையொன்று கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

7 பேரும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, நீதிவான் ஜெ.பிரபாகரன், மீனவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .