2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நுளம்புகள் பெருகும் வகையில் பற்றைகள் வளர்ந்துக் காணப்படுகின்ற காணிகளுக்கு, யாழ்ப்பாணம் மாநகர சபையால் அதன் உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு இரு வாரங்களுக்குள், குறித்த காணிகள் துப்புரவு செய்யப்பட்டு டெங்கு நுளம்புப் பெருக்கம் ஏற்படாத வகையில் சுத்தம் செய்ய வேண்டுமெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், அவ்வாறு நடந்து கொள்ளாவிட்டால், எவ்வித முன்னறிவித்தலுமின்றி, குறித்த காணிகளை அரச உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X