2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’காணாமல் ஆக்கப்படோருக்கு முடிவு வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

காணாமல் ஆக்கப்படோருக்கு முடிவு வேண்டும். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்றாவது சொல்லுங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம் என, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களை ஒரு கனமாவது நாங்கள் பார்க்க வேண்டும். அவர்கள் இருக்கின்றார்களா என்பது தான் எங்கள் கேள்வி. எங்களுக்கு எத்தனை வசதிகளை அவர்கள் செய்து தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும், அவர் கூறினார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான விசேட நிகழ்வானது, மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்த 10 வருடங்களில் அவர்கள் பல்வேறு ஆணைக்குழுக்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் எந்த ஆணைக்குழுவும் எங்களுக்கு முழுமையான பதிலை வழங்கவில்லை. 

பல ஆணக்குழு முன் நாங்கள் முன்னிலையாகி எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஐ.நா வரை தமிழர்களுடைய மனசாட்சி தட்டியுள்ளது. ஆனால், இன்னும் அது கேட்கப்படவில்லை. வருகின்ற செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு உள்ளது.

எனவே, எமது பிள்ளைகள் எமது உறவினர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற தீர்வை சொல்லும் வரை கேட்டுக் கெண்டே இருப்போம் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .