2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிணற்றுக்குள் இருந்த வெடிபொருட்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார், முருங்கன், கட்டுக்கரை, கோரமோட்டை பகுதியில், புதன்கிழமை (05), கிணற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்களை, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, நேற்று (9) மாலை பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். 

குறித்த கிராமத்தில், யுத்தம் காரணமாகக் கைவிடப்பட்டிருந்தக் காணியை, அதன் உரிமையாளர், புதன்கிழமை (05)​ துப்புரவுச் செய்துள்ளார். 

இதன்போது, குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றைத் துப்புரவுச் செய்யும் போது, அந்தக் கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த உரிமையாளர், அது தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர். 

இதையடுத்து, குறித்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், அது தொடர்பில், மன்னார் திமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றனர். 

இதைத்தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன், நேற்று (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, குறித்த கிணற்றுக்குள் இருந்த அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றினர். 

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில், விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X