2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

‘கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல்  கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்  கைதிகளின் விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்றயதினம் அரசியல் கட்சிகளும், பொதுஅமைப்புகளும்  இணைந்து மேற்கொண்ட  கலந்துரையாடலில் கலந்துகொண்டு  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஏனைய சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவனியா மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளால் இன்றயதினம் கலந்துரையாடயல் ஒன்று மேற்கொள்ள பட்டு ஒரு முடிவு எட்டபட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 22ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றை மேற்கொள்வதாக தீர்மானிக்கபட்டிருக்கிறது.

அரசியல் கைதிகள் 10 தொடக்கம் இருபது வருடங்கள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள்.  அரசியல்கைதிகளை  விடுவிப்பதாக ஜனாதிபதியால் கூட முன்னர்  வாக்குறுதி வழங்கபட்டிருந்தது. எனினும் எந்த தீர்வும் இதுவரை இல்லை. அவர்கள் பலமுறை சிறைச்சாலைகளுக்குள்ளே சாத்வீகமான போராட்டங்களை மேற்கொண்டு நம்பிக்கை இழந்திருக்கும் இந்தநேரத்தில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.  

இந்த கைதிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கபட்டது. ஆனால் அந்த நீதிமன்றம்  அரசியல்கைதிகளின் விடுதலைக்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கபடாத ஒருநிலை இருக்கிறது.

ஐ.நா மனிதவுரிமை பேரவையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும், அரசியல் கைதிகள் விடுவிக்கபடுவார்கள் என்ற வாக்குறுதிகள் இலங்கை அரசாங்கத்தால் வழங்கபட்டுள்ள நிலையிலும், இந்த அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் அனைத்து தரப்பினரும் நம்பிக்கை இழந்துள்ளனர். 

எனவே, உடனடியாக அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசயில் கைதிகளை விடுதலை செய்யவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X