2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

‘கூராய் கிராம மக்கள் இடம்பெயரும் அபாயம் உள்ளது’

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

பறங்கி ஆற்றில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் மணல் அகழ்வுக் காரணமாக, மன்னார் - கூராய் கிராம மக்கள், எதிர்காலத்தில் இடம்பெயர வேண்டிய அபாயமுள்ளதாக, மாந்தை மேற்குப் பிரதேசச் சபைத் தவிசாளர் சந்தியோகு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கூராய் மக்கள் கூறுவது போல, கட்டுப்பாடு இல்லாத இந்த மணல் அகழ்வுச் செயற்பாடுகளால், எதிர்காலத்தில் அப்படியானதொரு நிலை ஏற்படலாமெனத் தெரிவித்தார்.

எனவே, தற்காலிகமாக அந்தப் பகுதியில், மணல் அகழ்வுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், அந்தக் கிராம மக்களுடனும் சில பொதுஅமைப்புகளுடனும் கலந்தாலோசித்தப் பின்னரே, இது தொடர்பில் ஏதேனும் முடிவு எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பாக, ஜனாதிபதிக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராமத்தில் உள்ள பறங்கி ஆற்றில், சட்டவிரோதமான முறையில், தொடர்ச்சியாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், தற்போது, குறித்த ஆற்றில் நீர் வரத்து இல்லாமல் காய்ந்து காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X