2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கொக்காவில் விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2016 ஜூலை 24 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்
 
கொக்காவில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30க்கு இடம்பெற்ற விபத்தில் வவுனியாவைச்  சேர்ந்த    அல்பட்  ஜெயக்குமார் (வயது 24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி (வயது 23) ஆகியோர் பலியாகியுள்ளனர். அவர்களின் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து வவுனியாநோக்கி பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்த மினி பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விருவரும் பலியாகியுள்ளது.

சாரதி, அவ்விடத்திலிருந்து  தப்பிச்  சென்று  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை  பொலிசார்   மாங்குளம் பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X