2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கோடாவினை உடமையில் வைத்திருந்தவருக்கு தண்டத்துடன் கூடிய சிறை

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்மடு நகர்ப்பகுதியில் 423 போத்தல் கோடாவினை உடமையில் வைத்திருந்தவருக்கு ஒரு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் நான்கு மாதகால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வியாழக்கிழமை (15) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, கல்மடுநகர் காட்டுப்பகுதியில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப்;பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்;றிவளைப்பின் போது 423 போத்தல் கோடாவினையும் அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்த பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, ஒரு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்;டதுடன், நான்கு மாதகால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--