2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கிணற்றுக்குள் பாய்ந்த உழவு இயந்திரம்

George   / 2016 மே 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் வயலில் இருந்த உழவு இயந்திரம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து திங்கட்கிழமை (23) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிணற்றைச் சுற்றியுள்ள வயலில் உழவு செய்து கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சிறு காயங்களுக்கு உள்ளான சாரதி, அயலவர்களால் காப்பாற்றப்பட்டார்.

சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டதால் கிணற்றில் இருந்த நீரை கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அகற்றிய பின்னர், உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .