George / 2016 ஜூலை 15 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த மாபெரும் தொழில் சந்தை இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழில் மற்றும் தொழில் சங்க தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர கலந்து கொண்டார்.
இதன் போது தொழில் சந்தைகளை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தமது சுய விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
நிகழ்வு காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக இடம்பெறவுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அமைச்சரின் வருகை தாமதமானதால் முற்பகல் 11 மணியளவில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
இதனால் நேரத்துடன் வருகை தந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026