George / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுகின்றமைக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கண்டனத்தினைத் தெரிவித்தார்.
“முல்லைத்தீவு நகரத்தில், பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று, அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர், பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், இரவோடிரவாக காந்திக்கு சிலை அமைப்பது பொருத்தமற்றது.
அனுமதியற்ற முறையில் புத்தர் சிலைகளை வைக்கும் பிக்குகளுக்கும் எம்மவர்களுக்கும் இடையிலேயே என்ன வித்தியாசம் உள்ளது” என்றார்.
“இதேவேளை, முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்க, பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை” என கரைதுறைபற்றின் பிரதேச சபையின் செயலாளர், கூட்டத்தில் தெரிவித்தார்.
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago