Niroshini / 2016 ஜூலை 30 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
கிராம அபிவிருத்தி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களே அந்தக் கிராமத்துக்கு முதுகெலும்புகள் என வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016- எனும் திட்டத்தின் கீழ் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சங்கங்களுக்கான சுமார் 2 மில்லியன் பெறுமதியான பொருட்களும், அதே வேளை திணைக்களத்தால் தையல் பயிற்றப்பட்ட 17 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
இதில், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் இணைப்புச் செயலாளர், மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிராம மட்ட சங்கங்களான இவ் கிராம அபிவிருத்தி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களே அந்தக் கிராமத்துக்கு முதுகெலும்புகள். கிராமங்களது முன்னேற்றம் அந்தந்த கிராமங்களில் உள்ள மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுடைய கையிலேயே இருக்கின்றது. எனவே இவ்வாறு இருப்பதனால் இவற்றை ஒரு வருமானம் தரும் அமைப்புக்களாக மாற்றி அவற்றின் வாயிலாக அந்தக் கிராமங்களை வளப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான திட்டத்தை தாம் அமுல்படுத்தியுள்ளோம் என்றார்.

13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025