2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

Niroshini   / 2016 மார்ச் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி புனித பற்றிமா ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சித்தி விநாயகர் ஆலயம் வரை சென்றது.

'உண்ணாநோன்பில் அரசியல் கைதிகள் கண்ணீரில் அவர்களின் குடும்பங்கள் மீது அரசே கருணை காட்டு', 'ஒரு சில இனவாதிகளுக்காக ஒரு சமூகமே சீரழிக்கப்படலாமா', 'ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பாயா நல்லாட்சி அரசே', 'நம் பிள்ளைகள் விடுதலைக்காக நல்லாட்சிக்கு வாக்களித்த நாம் தினம் தினம் நடுத்தெருப் போராட்டத்தில்' ஆகிய வாசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .