2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சட்டவிரோத விதைப்புகளை அழிக்க அனுமதி

George   / 2017 மே 29 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கையில், சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விதைப்புகளை அழிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விதைப்புகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவில் தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை அழிப்பதற்கான அனுமதி, கமநல திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

இரமைணமடுக்குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட நெற்செய்கையைவிட 150 ஏக்கருக்கும் அதிகமாக விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குளத்தின் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாவட்ட அரச - அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .