2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

சுன்னாகம் - ஐயனார் கோவில் பகுதியில், இன்று (16) அதிகாலை நேரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பலொன்று, வீட்டில் இருந்த பொருட்களை அடித்துடைத்துச் சேதம் விளைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இதன்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை 12.15 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவொன்று, வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்துள்ளது.

இதன்போது, வீட்டில் இருந்த பெண்கள் இருவர், அங்கிருந்து தப்பிச் சென்று, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--