2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சேதமடைந்த வீதி செப்பனிடப்படுகின்றது

George   / 2016 மே 24 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் (ஏ - 32) பூநகரிக்கு அண்மித்த பகுதியில் மண்டைக்கல்லாறு வெள்ளம் பாய்ந்தமையால் சேதமடைந்த வீதி, தற்காலிகமாக செப்பனிடப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும்மழையால் கடந்த 16 ஆம் திகதி தொடக்கம்  மண்டைக்கல்லாற்றில் 3 அடி உயரத்துக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வந்தது. 

இதனால் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டு, கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் படகு சேவை நடத்தப்பட்டது. வெள்ளம் வற்றி படகு சேவை நிறுத்தப்பட்டபோதும், வாகனங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு வீதியில் பெருங்குழிகள் ஏற்பட்டு, வீதியானது முழுமையாக சேதமடைந்துள்ளமையால் உடனடியாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இதனைக் கவனத்தில் எடுத்த வீதி அதிகார சபை தற்காலிக செப்பனிடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
வீதி செப்பனிடும் பணிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், திங்கட்கிழமை (23) சென்று பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .