Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் டிப்பர் வாகனங்களை வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்களை ஒன்றினைத்து டிப்பர் உரிமையாளர் சங்கம் ஒன்றை உருவாக்க மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் டிப்பர் வாகனங்களை வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகன உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம், நேற்று (5) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதேசச் செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வனவள திணைக்கள அதிகாரிகள் மாவட்ட சுற்றுச் சூழல் உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மற்றும் தொடர்புபட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்களை ஒன்றிணைத்து சங்கம் ஒன்று அமைப்பது எனவும் எதிர்வரும் காலங்களில் இச்சங்கத்தின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் மன்னாரில் மண் அகழ்வுகளை அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் சமாசங்களின் ஊடாக மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே அதனை கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட டிப்பர் உரிமையாளர்களுக்கான சங்கம் ஒன்றை அமைக்கும் அங்குராப்பணக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 3 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெறும்.
குறித்த கூட்டத்துக்கு டிப்பர் வாகன உரிமையாளர்கள் கலந்துகொள்ளுமாறு ஒழுங்கமைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2 hours ago
6 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
31 Dec 2025
31 Dec 2025