2021 மார்ச் 03, புதன்கிழமை

தட்டுவன்கொட்டிக்கு உடனடியாக குடிநீர் விநியோகம்

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துக்கு, உடனடியாக குடிநீரை வழங்க வேண்டும் என கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துக்கு, பிரதேச செயலகம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக அக்கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பாக, இன்று இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட ஆரம்பத்திலேயே மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இது தொடர்பாக இணைத்தலைவர்கள் கேள்வியெழுப்பியபோது, பிரதேச செயலர் எஸ்.முகுந்தன், அக்கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால், குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து, மாற்று வீதியூடாக குடிநீர் விநியோகத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறு இணைத்தலைவர்கள் உத்தரவிட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .