2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தனியார் கணிக்குள் அத்துமீறி மணல் அகழ்ந்தவர் கைது

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பளை சாவிட்டி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து, காணி உரிமையாளரை தாக்கி மணல் அகழ்ந்த சங்கத்தறவை பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை உழவு இயந்திரத்துடன் வெள்ளிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சாவிட்டி பகுதியில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்துடன் நுழைந்த மேற்படி இளைஞன் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் காணி உரிமையாளர் வினவியபோது அவரை தாக்கிவிட்டு மணல் அகழ்ந்து எடுத்து சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளர், பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இயக்கச்சி பகுதியில் உள்ள கோயில் காணி ஒன்றில் மணல் பறிக்கும் போது உழவு இயந்திர சாரதியினை கைது செய்துள்ளனர். அத்துடன் உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைதானவருக்கு எதிராக அடித்தமை, மற்றும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .