2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

திருமுறுகண்டி நித்தியகலாவுக்கு நீதி கோரி நாளை ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

திருமுறிகண்டி நித்தியகலாவுக்கு நீதிகோரி நாளைய தினம் வெள்ளிக்கிழமை (31), கண்டன ஆர்ப்பாட்டமொன்றை திருமுறிகண்டி பஸ் தரிப்பிடத்தில்  மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திருமுறுகண்டி கிராம மட்ட அமைப்பு அறிவித்துள்ளது.

திருமுறிகண்டியினை சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர், கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்வத்தினை கண்டித்து, திருமுறுகண்டி கிராம மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது, நாளை (31) காலை 10 மணியளவில், திருமுறுகண்டி பஸ் தரிப்பிடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அத்துடன் அண்மைக் காலமாக தமிழர் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய (29) தினம் கொலைசெய்யப்பட்ட திருமுறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா கொலை விடயத்தில், விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படவேண்டியும், குறித்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு திருமுறிகண்டி கிராம மட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .